SAvsIND டெஸ்ட்; டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. கடந்த நாள் முன்தினம் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 3-ஆம் நாள் ஆட்டதில் இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனைத்தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்க்சை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலையில் உள்ளது.
இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் செய்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இதனால், விக்கெட் கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் (26 டெஸ்ட்) என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு டோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்திய விக்கெட் கீப்பரின் அதிவேகமாக இருந்தது.
Ton ? for Pant ?
— Mumbai Indians (@mipaltan) December 28, 2021
Congratulations to Rishabh Pant for becoming the fastest ?? wicketkeeper to scale the feat of 1️⃣0️⃣0️⃣ dismissals in Test cricket ??#OneFamily #SAvIND @RishabhPant17 @BCCI pic.twitter.com/uvqFtMdBmb