தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த பெண் ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே பெண்கள் பிறந்தது முதல் பெரும்பாலும் யாரையாவது எதிர்பார்த்தே வாழவேண்டிய தேவை இருக்கும்.
தங்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ள மற்றவர்களிடம் அனுமதி கேட்க வேண்டியிருக்கும். பிறந்தது முதல் திருமணம் வரையில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணத்தின் பின்னர் கணவனின் கட்டுப்பாட்டிலும் தான் பெரும்பாலான பெண்கள் இருப்பார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களை தாங்களே உயர்த்திக்கொண்டு குடும்பத்தையே உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகலும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு ஆற்றல் கொண்ட சிங்க பெண்களாக இருப்பார்களாம்.
அப்படி தனித்துவமான குணங்கள் மற்றும் ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களை முதல் பார்வையிலேயே வியக்க வைக்கும், அளவுக்கு பேரழகிககளாகலும், அதே சமயம் அதீத மன உறுதிக்கு பெயர் பெற்றவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒருபோதும் விரும்புவது கிடையாது. தங்களுக்கு சரி என்று தோன்றுவதை தைரியமாக செய்ல்படுத்தும் குணம் கெண்டவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
சுக்கிரனால் ஆளப்படுவதால், இந்த ராசி பெண்கள் வாழ்வில் ஒருபோதும் பணப்பிரச்சினையை எதிர்கொள்ள மாட்டார்கள். இவர்கள் பெண்ணாக இருந்தாலும் ஒரு குடும்பத்தையே வழிநடத்தும் ஆற்றலை பிறப்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனால் ஆளப்படுவதால், பிறப்பிலேயே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் சுதந்திரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாவும், யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களை தாங்களே உச்சத்தில் வைப்பார்கள்.
இவர்கள் வாய்ப்புகளையும் மக்களையும் ஈர்க்கும் ஒரு காந்த ஆளுமையைக் கொண்டுள்ளனர். சிம்ம ராசிக்காரர்கள் ஆபத்துக்களை எடுக்க பயப்படுவதில்லை, இது பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமாக பலனளிக்கிறது.
கன்னி

விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் கவனமாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் செயல்படுவார்கள். இவர்களுக்கு பணத்தை கையாளுவதில் சிறப்பான ஆளுமை இருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்காக அறியப்படுகிறார்கள், இதனால் அவர்கள் எந்த நிறுவனத்திலும் மதிப்புமிக்க சொத்துக்களாக மாறுகிறார்கள்.
இந்த ராசி பெண்களுக்கு யாரும் உதவி செய்யாவிட்டாலும் அவர்களின் சொந்த முயற்சியால் வாழ்வில் உச்சத்துக்கு வருவார்கள்.குடும்பத்திற்கு செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் சரியாக நிறைவேற்றும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |