சனி நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனி கர்மம் மற்றும் நீதியின் அதிபதியாக திகழ்கின்றார்.
நாம் செய்யும் பாவம் புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் போதே அதற்காக பலன்களை கொடுத்துவிடுவார் என்பதால் சனி பெயர்ச்சி என்றாலே ஒருவித பயம் அனைவருக்கும் இருக்கும்.

அந்தவகையில், சனிபகவான், உத்தரட்டாதி நட்சத்திரத்திலிருந்து வெளியேறி, மே 17 ஆம் திகதி ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசித்தார். அதன்பின் சனிபகவான் அக்டோபர் 9 வரை ரேவதி நட்சத்திரத்திலேயே சஞ்சரிப்பார்.
ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாக கிரகங்களின் இளவரசரான புதன் இருப்பதாலும், புதன் கிரகம் சனிபகவானுடன் நட்புணர்வு கொண்டவராகக் கருதப்படுவதாலும், இந்த கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம், 'திரிகிரக யோகம்' எனப்படும் ஒரு அரிய கிரக அமைவின்போது நிகழ்ந்துள்ளது. தற்போது சூரியன், புதன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ரிஷப ராசியில் ஒன்றாக இணைந்துள்ளதால், அதன் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அமோக வெற்றியை கொடுக்கப்போகின்றது.
ரிஷபம்

சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக உச்சகட்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆளுமை மேம்படும், மேலும் வேலை மற்றும் வணிகம் விடயங்களில் வெற்றி கிட்டும். குறிப்பாக சனியின் ஆசியால் நிதி நிலையில் பாரிய ஏற்றம் உண்டாகும்.
கும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பழைய கடன்கள் கூட வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
இந்த நட்சத்திர மாற்றத்தால் புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் உருவாகும்.இவர்களின் நிதி நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்படவுள்ளது.
இந்த காலகட்டத்தில் அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதனால் துறைகளிலும் வெற்றிகளை குவிப்பதற்கான வாய்ப்பு தானாகவே உருவாகும்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் நீண்ட காலமாக அனுபவித்து வந்த சிரமங்களிலிருந்து படிப்படியாக நிவாரணம் பெறுவார்கள்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கான தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும்.
தொழில் ரீதியில் அமோக முன்னேற்றத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும். வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |