முடிவுக்கு வரும் சனியின் வக்ர இயக்கும் - தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிகள்!
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் விளங்குகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கர்மவினை, நீதி மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகக் கருதப்படும் சனிபகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனிபகவான் வக்ர நிலையிலிருந்து நேர்கதிக்கு மாறும்போது, தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடங்குவதுடன், தொழில் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளும் உருவாககும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில், டிசம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மீன ராசியில் பிரவேசிக்கும் சனிபகவான், 2027-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார்.
இந்தக் காலகட்டத்தில் சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு நற்பலன்களை வழங்கப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நேரடி இயக்கம் கலவையான பலன்களை வழங்கும். இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வெளிநாடு தொடர்பான வேலைகள் அல்லது வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும் தேடி வரும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால், பொருளாதார நிலையைப் படிப்படியாக மேம்படுத்த முடியும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவதுடன், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் உண்டு. நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
துலாம்

சனிபகவானின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமளிக்கும் முன்னேற்றங்களைக் கொடுக்கும். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம். புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும்.
வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் இது சாதகமான காலகட்டமாக அமையலாம். தொழில் வாழ்க்கையில் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
மகரம்

சனிபகவானின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். நீண்டகாலமாகத் தொழில் வாழ்க்கையில் சந்தித்து வந்த சவால்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
பணியிடத்தில் மேற்கொள்ளும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில்முனைவோர்கள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தவும், பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
இந்தக் காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். இதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்துவதுடன், சேமிப்பையும் அதிகரிக்க முடியும். சமூகத்தில் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |