வாழும் ஆசையே சலித்துப்போனது.. வேதனையில் பிக் பாஸ் தாமரை
Bigg Boss Thamarai Selvi Insta Story: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தாமரை வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அவரது விவாகரத்திற்கு பதிலாக அமைகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் தாமரை
பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தாமரை செல்வி.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்து பின்பு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் இரண்டாவதாக பார்த்த சாரதி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
மேடை நடன கலைஞரான இவர் பிக்பாஸிற்கு பின்பு சீரியல், சினிமா என வாய்ப்புகள் மூலமாக கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரது கணவர் தாமரையும், நானும் பிரிந்துவிட்டதாக போஸ்ட் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி அவருடன் இருந்த புகைப்படம் அனைத்தையும் நீக்கியிருந்தார்.
இதற்கு தாமரை எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி இன்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

விவாகரத்திற்கான பதிலா?
தாமரைச்செல்வி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாரதி எழுதிய 'சலித்துப்போன வாழ்க்கை... என்ற கவிதையை பகிர்ந்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இளம் வயதில் இழக்கக் கூடாது இழப்பேன்... வாழ்க்கையை அறியாத வயதிலேயே அதன் வலிகளையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டேன்...
வலிகள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுத்தந்தன... வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது வாழும் ஆசையே சலித்துப்போனது...!
உறக்கமில்லா இரவுகள்... கண்ணீரோடு கழியும் தனிமைகள்... தனிமையில் அழுது தீர்த்த கண்ணீரை... தலையணை மட்டுமே அறிந்திருந்தது...!
வாழ்க்கையை வாழ்வதற்கு முன்பே... வலிகளால் வயதாகிப்போனேன்... என்ற வரிகளுடன் பின்னணியில் ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம் என்ற சோகமான பாடல் வரிகளுடன் பகிர்ந்துள்ளார்.
தாமரையின் இந்த பதிவு அவரது விவாகரத்தை உறுதி செய்கின்றதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |