30 ஆண்டுகளுக்கு பின்பு வக்ரமாகும் சனி: இன்று முதல் அபார வெற்றி பெறும் 3 ராசிகள்
மனிதர்கள் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பாரபட்சம் பார்க்காமல் பலன்களை கொடுப்பார்.
வக்ரமாகும் சனி
ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் நிலையில், அத்தருணத்தில் அனைத்து ராசிகளுக்கும் ஒரு தாக்கம் ஏற்படும்.
அதிலும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதால் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனிபகவான் 17ம் தேதி வக்ரமாகிறார். இந்த நிகழ்வு கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கின்றதாம்.
சனிபகவானின் இந்த வக்ர நிலை நவம்பர் வரை இருந்து பின்பு வக்ர நிவர்த்தி அடைகின்றார். இத்தருணத்தில் 3 ராசியினர் அனைத்து காரியங்களிலும் வெற்றியை சந்திக்க இருக்கின்றனர். ராசியினரை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினைப் பொறுத்தவரையில் 7ம் வீட்டில் சனி வக்ரமாவதால், திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பதுடன், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கின்றது.
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுடன், சனி பகவானின் ராஜயோகத்தினை அடைவதால் நிதி பலன்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
மகரம்
மகர ராசியில் 2வது வீட்டில் வக்ரமடையும் சனி பகவானால், சாதகமான சூழ்நிலை ஏற்படுவதுடன், நிதி பலன்கள் அதிகமாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவதுடன், நிதிநிலையும் வலுவாகவே இருக்கும். பணியிடங்களில் மரியாதை அதிகரிப்பதுடன், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினைப் பொறுத்தவரையில் சனி பகவான், 9ம் வீட்டில் வக்ரமாகிறார். இந்த காலத்தில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், மாணவர்களுக்கு இந்த காலம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும்.
உங்களது தைரியம் மற்றும் வீரம் அதிகரிப்பதுடன் பெரிய அளவிலான பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்குமாம்.