நவபஞ்சம ராஜயோகத்தால் வாகனம் வாங்கும் யோகம் கொண்ட ராசியினர்- நீங்க என்ன ராசி?
ஜோதிட சாஸ்திரப்படி, கிரக மாற்றங்கள் நிகழும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
அதில், சனி மற்றும் செவ்வாய் மாற்றம் இருக்குமாயின் அதன் தாக்கத்தினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் யோகம் கிடைக்கும்.
அந்த வகையில், பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் ஹோலி பண்டிகைக்கு பின் சனி- செவ்வாய் உடன் ஒன்பதாவது ராஜயோகம் உருவாக்குகிறது.
இந்த வருஷம் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6.31க்கு சனி, செவ்வாய் கிரகங்கள் 120 டிகிரி இடைவெளியில இருக்கும். இதனால் 9ஆவது ராஜயோகம் கிடைக்கவுள்ளது.
அப்படியாயின், சனி- செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாகனம் வாங்கும் வாய்ப்பு கொடுக்கும் ராஜயோகம்
1. கன்னி ராசி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராஜயோகத்தால் வாழ்க்கையில் பாரிய சந்தோஷம் கிடைக்கும். அத்துடன் அவர்களின் இலக்கை இலகுவாக அடைந்து விடுவார்கள். பெரிய அதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்தால் நிறைய பொறுப்புக்கள் வரும். பண அதிர்ஷ்டம் கிடைப்பதால் புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது.
2. சிம்ம ராசி
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய்- சனி சேர்க்கையால் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் இருக்கும். இதனால் வருமானம் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கும். சம்பளத்தில் மாற்றம் இருக்கும், இருந்தாலும் உங்களின் உழைப்பை முழுமையாக கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உங்கள் மீதுள்ள பகை விலகும் வாய்ப்பு உள்ளது.
3. மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்களுகு்கு ராஜயோகத்தால் பயணம் செய்வதற்கான வாய்ப்பு வரும். நீங்கள் பயணம் செய்யும் பொழுது அதற்கான பணமும் கை நிறைய உங்களிடம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் வாயை அளவோடு வைத்து கொள்வது நல்லது. இலக்குக்களை அடைவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைவதால் உங்களுக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).