18 ஆண்டுகளுக்குப் பின் சனி சந்திர கிரகணம்.. விஞ்ஞானிகள் கொடுத்த குட்நியூஸ்
இந்தியாவில் 18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது வரும் 24ம் தேதி காணப்படும் என்று கூறப்படுகின்றது.
சனி சந்திர கிரகணம்
இந்த வானியல் நிகழ்விற்கு சனியின் சந்திர மறைவு என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வெறும் கண்களால் காணக்கூடிய இந்த, நிகழ்வானது வரும் 24 மற்றும் 25தேதியில் நள்ளிரவில் இந்தியாவில் காணப்படும். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்த அரிய வானியல் காட்சியினைக் காணலாம்.
இந்த நேரத்தில் சனி சந்திரனுக்கு பின்னால் மறைந்திருக்குமாம். சனியின் வளையங்கள் சந்திரனின் விளிம்பில் தெரியுமாம்.
ஜுலை 24 அதிகாலை 1.30 மணிக்கு வானில் தெரிவதுடன், அதிகாலை 1.44 மணிக்கு சந்திரனானது சனியை முழுமையாக மறைக்கும். பின்பு பிற்பகல் 2.25 மணிக்கும் சந்திரனுக்கு பின்னாலிருந்து சனி வெளியே வருவதையும் காணலாம்.
இந்த நிகழ்வானது இந்தியாவைத் தவிர இலங்கை, மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்தை வெவ்வேறு காலகட்டங்களில் காண முடிகிறது.
வெறும் கண்களால் இந்நிகழ்வினைக் காணமுடியும் என்றாலும், சனியின் வளையங்களைக் காண்பதற்கு சிறிய தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்திய மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் கூறியுள்ளது. அதாவது இந்த காட்சியானது மீண்டும் மூன்று மாதங்களுக்கு பின்பு இந்தியாவில் தெரியுமாம்.
அதாவது இந்த ஜுலை மாதத்தில் நீங்கள் பார்க்க முடியாவிட்டால் அக்டோபர் 14ம் தேதி இரவு சனியின் சந்திர கிரகணத்தை மீண்டும் வானில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |