3 விரல்கள் அகற்றம்.... கேப்டனுக்காக மனமுடைந்து நடிகர் சத்யராஜ் வெளியிட்ட பதிவு
நடிகர் மற்றும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது எனக்கூறியுள்ளனர்.
மேலும், மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் அவர் நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது உடன், நடிகர் சத்யராஜ் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
அவர் வெளிட்யிட்டுள்ள வீடியோவில் வணக்கம் கேப்டன் என்று எல்லோராலும் பாசத்துடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் என் அன்பு நண்பன் விஜி பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.