தாலியுடன் புகைப்படம் வெளியிட்ட புதுமண தம்பதிக்கு சதீஷ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் பதிவு
கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்து சதீஷ் பகிர்ந்த சுவாரசிய தகவல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
திருமணம்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நண்பரின் கருத்து
புகைப்படங்களை பார்த்த டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் ஒரு சில கருத்துக்களை அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, ‘ நானும் கிங்ஸ்லியுமே நீண்ட கால நண்பர்கள். டான்ஸினால் எங்கள் நட்பு தொடர ஆரம்பித்தது. திருமணத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இப்படி இருந்தால் டைரக்டாக அறுபதாம் கல்யாணம் என அவரை பல முறை கலாய்த்திருக்கிறோம்.
பின்னர் சங்கீதாவுடன் காதல் ஏற்பட்டது, தற்போது இவர்களின் திருமணம் மைசூரில் நடைபெற்றது. நானும் சென்றிருக்க வேண்டும், ஷீட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக செல்ல முடியவில்லை.. ” என பகிர்ந்துள்ளார்.
மைசூரில் கிங்ஸ்லி திரைப்பட ஷீட்டிங்கில் இருந்தார். இதன்போது தான் திருமணம் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சில படக் குழுவினர்களுடன் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |