Relationship-ல் இருக்கலாமா என்று கேட்ட விஷ்னு? முகத்திரையை கிழித்த பெண் போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவரிடம் விஷ்ணு மோசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். தற்போது 60 நாட்களை கடந்து செல்லும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியவில்லை.
அனன்யா வைத்த குற்றச்சாட்டு
இந்நிலையில் அனன்யா ராவ் விஷ்ணு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை வைத்துள்ளார். பிக் பாஸ் வீடு இரண்டு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது.
இதில் மாயா, பூர்ணிமா, அனன்யா, விக்ரம், ரவீனா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அனன்யா விஷ்ணு தன்னிடம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா என்று கேட்டதாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விஷ்ணு ஏற்கனவே பூர்ணிமாவிற்கு ட்ராக் போட்ட நிலையில், பின்பு பல்டி அடித்து அனன்யாவிடம் இவ்வாறு பேசியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஷ்ணு கேம் விளையாடுவதற்காக இவ்வாறான தந்திரத்தை பயன்படுத்தி வருகின்றார் என்று சக போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |