உப்புமா செய்து சமாளிக்க நினைத்த மனைவிக்கு யூடியூப்பர் கொடுத்த பதிலடி- அத நீங்களே பாருங்க!
உப்பு மா கொடுத்து சமாளிக்க நினைத்த மனைவிக்கு பிரபல யூடியூப்பர் சதீஸ் தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
சதீஸ் - தீபா தம்பதியினர்
தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் செய்து போட்டு பலர் பிரபலமடைந்து வருகின்றார்கள்.
இதன்படி, சதீஸ் - தீபா தம்பதியினர் குடும்பமாக சேர்ந்து பல நகைச்சுவை வீடியோக்களை செய்து பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றார்கள்.
அந்த வகையில் இரவு நேர சாப்பாட்டிற்கு சதீஸிடம், மனைவி - தீபா உப்பு மா செய்து தரட்டுமா? என கேட்டுள்ளார்.
அப்போது சற்று நேரம் யோசித்த சதீஸ், “இல்லை தோசை வேண்டும்” என பதிலளித்துள்ளார். தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன வேண்டும்? என தீபா கேட்கிறார்.
அதோடு குறுமா? இருக்கின்றது என்றால் 15 தோசை தயார் செய்ய வேண்டும்.
வில்லத்தனமாக பதிலளித்த சதீஸ்
சட்னி இருக்கு என்றால் 8 தோசை தயார் செய்ய வேண்டும் என்று தனக்குள் தீபா யோசித்து கொண்டிருக்கும் போது சதீஸ் தொட்டுக்கொள்ள என்ன இருக்கு? என கேட்கிறார்.
பயந்தபடி சிரித்து கொண்டு, “தொட்டுக் கொள்வதற்கு மிளகாய் பொடி மாத்திரம் தான் இருக்கின்றது” என தீபா பதிலளிக்கிறார்.
அப்போது எத்தனை தோசை வேண்டும் என தீபா கேட்க, சதீஸ் அப்போ 18 தோசை சூடு என கூறி விட்டு வில்லத்தனமாக பார்க்கிறார்.
இதற்கான முக்கிய காரணம் சதீஸிற்கு தோசை என்றாலே பிடிக்கும் தொட்டுக் கொள்ள எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பது தான்.
இந்த காட்சி அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ இப்படி தான் வீடுகளில் பலர் வாழ்ந்து வருகிறார்கள்” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |