சாதிகளை கடந்த திருமணம்.. யூடியூப்பர் பாலா- கீர்த்தி! ஊடகத்திற்கு முன் ஓபன் டாக்
பிரபல யூடியூபர்ஸ் பாலா மற்றும் கீர்த்தி இருவரின் திருமணம் பல இன்னல்களுக்கு மத்தியில் தான் நடந்தது என கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாலா - கீர்த்தி
தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஜோடிகளாக இருந்து வருபவர்கள் தான் பாலா - கீர்த்தி.
இவர் சமீபத்தில் சினிஉலகம் ஊடகத்திற்கு தங்களின் காதல் கதையை பகிர்ந்துள்ளார்கள்.
அதில் “ பிரபல யூடியூப்பர்ஸாக இருக்கும் பாலா, கீர்த்தி இருவரும் 4 வருடங்களாக நண்பர்களாக மாத்திரம் பழகி வந்துள்ளார்கள். பின்னர் கீர்த்தியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போது தான் கீர்த்திக்கு பாலாவின் மீது ஒரு காதல் ஏற்பட்டுள்ளது. இவரின் காதலை பாலாவிடம் முதலில் கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட பாலா கீர்த்தியின் அம்மாவிடம் முதலாக சென்று பேசியுள்ளார்.
மூவரும் பேசிக் கொண்ட இருக்கும் போது கீர்த்தியின் அப்பா யதார்த்தமான வீட்டிற்குள் வருகிறார். பயத்தில் பாலா நின்றுக் கொண்டிருக்கிறார்.
பாலாவை பார்த்த கீர்த்தியின் அப்பா, “ என் மகளை என் சாதியில் நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன்.. நீங்கள் சென்று வாருங்கள்..” என கூறி வெளியில் அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர் இவர்கள் இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |