அகதியாக சென்ற ஈழத்து இளைஞர்... சரிகமப மேடை கொடுத்த இன்ப அதிர்ச்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் சீனியர் சீசன் 5க்கான மெகா ஆடிசன் ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக சரிகமப லிட்டல் சேம்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த வாரத்தில் நிறைவடைந்தது. இதில் வெற்றியாளராக திவினேஷ் தெரிவு செய்யப்பட்டார்.
பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனாலே புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் பாடல் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைத்து ரிவியிலும் இவ்வாறான பாடல் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சரிகமப லிட்டில் சேம்ஸ் நிறைவடைந்த நிலையில், தற்போது சீனியர் சீசன் 5க்கான மெகா ஆடிசன் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஈழத்திலிருந்து அகதியாக சுவிஸ்ஸிற்கு புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவர் தனது திறவையினை வெளிக்காட்டி அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |