சரிகமப - வில் காதலியை அறிமுகப்படுத்திய சபேசன்: மகிழ்ச்சியடைந்த தருணம்
சரிகமப Pre Finale Celebration சுற்றில் போட்டியாளர் சபேஷன் அவருடைய காதலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதில் இறுதிச்சுற்று அதாவது வின்னருக்கான சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ம் திகதி இடம்பெற்றது.
இதில் டைடில் வின்னராக சுசாந்திக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவதாக போட்டியாளர் சபேசன் தேர்ந்தெடுக்கபட்டார். மூன்றாவதாக சின்னு செந்தமிழன் மற்றும் மக்கள் விருப்பப்படி பவித்ராவும் தேந்தெடுக்கப்பட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க இறுதிச்சுற்று முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான ஆறு போட்டியாளர்களுக்கும் Pre Finale Celebration இடம்பெற்றது.

இதில் ஆறு போட்டியாளர்களின் நெருங்கிய உறவுகளின் நெருங்கிய தருணங்கள் போட்டியாளர்களின் ஆசீர்வாதங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றன. அப்படி தான் போட்டியாளர் சபேசன் மேடைக்கு பாட அழைக்கப்பட்டார்.
அப்போது அவர் பாடுவதற்கு முன்னர் தான் 10 வருடமாக ஒரு பெண்ணை காதலிப்பதாக எல்லோர் முன்னிலையிலும் வெட்கப்பட்டபடி கூறினார்.
அப்போது அர்ச்சனா சபேசனிடம் 'அந்த பொண்டு டிவியில் பார்க்கும் தானே நீங்க ஹாய் சொல்லுங்க அவரோடு பேசுங்க என கூறினார்'.

அப்போது சபேசனின் காதலி பின்னே வந்து சபேசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சபேசனின் காதலியுடன் சபேசனின் தங்கையும் வந்திருந்தார்.
இப்படி இருக்க நடுவர் ஸ்ரீனிவாஸ் சபேசனின் காதலியிடம் “சபேசன் எப்படி மா நல்ல பையனா அப்படி கேட்க அதற்கு அவர் ஆமா ரொம்ப நல்ல பையன் ஆனா கொஞ்சம் சென்சிடிவான பையன் என கூறினார்”.

இதை கேட்டு எல்லோரும் அது தான் தெரியுமே என சந்தோஷமாக சிரித்தனர். அதன் பின்னர் நடுவர் சைந்தவி உங்கள் அண்ணண் தங்கை கோம்போ மிகவும் பிடித்திருக்கிறது என கூறினார்.
இதன் பின்னர் சபேசன் தங்கைக்கும் தன் காதலிக்கும் முன்னிலையில் “சொட்ட சொட்ட நனையுது தாஸ்மகால்” எனும் பாட்டை பாடி பாடலை பாடி கொண்டே ஒரு தாஜ்மஹாலை எடுத்து கொண்டு காதலியிடம் கொடுத்தார். சபேசனின் இந்த காதல் தருணம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |