சரிகமப மேடையில் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்திக் கொடுத்த பரிசு - கண்கலங்கிய தருணம்
சரிகமப Grand Finale மேடையில் நடுவர் கார்த்திக் இரண்டாவது இறுதிச்சுற்றுக்கு தெரிவான ஸ்ரீஹரிக்கு விலைமதிப்பில்லா பரிசை கொடுத்து மகிழ்வித்தார்.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றைய தினம் தனது 6 மாத பயணத்தை வெற்றிகரமாக முடித்து இருந்தது. இதில் இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டிருந்தார்கள். இதில் ஆறாவதாக இறுதிச்சுற்குக்கு தெரிவானவர் மக்க விருப்ப வாக்கில் தெரிவான போட்டியாளராவார்.
இந்த நிகழ்ச்சி பலரின் கனவை நனவாக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்குள் ஏதோ ஒரு கனவை சுமந்து கொண்டு தான் வருகிறார்கள்.

இந்த நிலையில் 23ம் திகதி நேற்று கிராண்ட் பினாலே இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் இரண்டு பாடல்கள் பாட வேண்டி இருந்தது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி மூலமாக பரிசுகள் கொடுக்கபட்டாலும் நகழ்ச்சியின் சார்பாக ரசிகர்கள் சார்பாக நடுவர்கள் சார்பாகவும் போட்டியாளர்களுக்கு அங்கீகாரமும் பரிசும் கொடுக்கப்பட்டது.

அப்படி தான் போட்டியாளர் ஸ்ரீஹரிக்கு நடுவர் கார்த்திக் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். நடுவர் கார்த்திக் கூறும் போது நான் பார்த்தேன் நான் பார்த்த வரைக்கும் எனக்கு பாட வேண்டும் மியூசிக் Program செய்ய வேண்டும் என உனக்குள் நிறைய ஆர்வம் உள்ளது.
போட்டியாளர்கள் மத்தியில் நீ கீபோட் வாசிக்கிறாய் அதோடு சேர்ந்து நன்றாக பாடுகிறாய் இதெல்லாம் உன்னிடத்தில் மிகவும் பிடித்திருக்கிறது.

ஏனென்றால் நான் இப்படி தான் எனவே உன் ஆசையும் என் ஆசையும் நிறைவேறும் வகையில் நான் உன்னை எனது Assistant ஆக சேர்த்து கொள்கிறேன் என ஸ்ரீஹரிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.
இது உண்மையில் மிகவும் பெரிய விடயம் சரிகமப நிகழ்ச்சியில் தான் இப்படி எல்லாம் செய்வார்கள் போல.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |