இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்ட இனியா... டைட்டில் வின்னருக்கு சொன்ன வார்த்தை!
சரிகமப சீனியர் சீகன் 5 இல் போட்டியாரளாராக பங்கேற்று இறுதி தருணத்தில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்ட நடிகை தேவயானியின் மகள் இனியா டைட்டில் வின்னர் சுஷாந்திகாவின் வெற்றிக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் (ஃபினாலே) வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.இறுதிச் சுற்றில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த சீனனில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களின் பட்டியலில் இனியாவுக்கும் முக்கிய இடம் காணப்பட்டது.

நடிகை தேவயானியின் மகள் என்பதால் இவருக்கு தான் லைட்டில் கொடுக்கப்படும் என ஆரம்பத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பு இருந்தது அனைவரும் அறிந்தது.
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் தன் மகளை பாடகியாக மாற்றக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தும் தன் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் மட்டுமே தனது மகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தை பலரும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பலரின் எதிர்பார்ப்புக்கு அப்பால், இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை.
இந்நிலையில், தன்னால் அடைய முடியாத வெற்றியை தனதாக்கிக்கொண்ட சரிகமப சீனியர் சீசன் 5 டைட்டில் வின்னர் சுஷாந்திகாவுக்கு வாழ்த்து கூறி இனியா வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.