சரிகமப - வின் டைட்டில் வின்னருக்கான விழா - கனவுகள் நனவாகப்போகும் தருணம்
சரிகமப வில் ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான இசை நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்பதற்கான காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக கடந்து தற்போது இறுதிக்கட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. இந்த நிலையில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றனர்.

அதில் முதலாவது இறுதிச்சுற்று போட்டியாளர் சுஷாந்திக்கா இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் ஸ்ரீஹரி மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளர் சபேஷன் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் சின்னு செந்தமிழன் ஐந்தாவது இறுதிச்சுற்று போட்டியாளர் ஷிவானி ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளர் பவித்ரா என தெரிவாக இருக்கின்றனர்.
இதில் யாரோ ஒருவர் தான் வெற்றியாளராக மகுடம் சூட இருக்கிறார்.
அந்த டைடில் நிகழ்ச்சிக்கான லைவ் போட்டி வரும் நவம்பர் 23 திகதி நடைபெற இருக்கின்றது. இந்த சமயத்தில் ஆறு போட்டியாளர்களில் யார் இசை உச்சத்தின் வெற்றி மகுடத்தை சூட போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |