அனல் பறக்க ஆரம்பமானது சரிகமப Grand Finale நேரலை! வெல்லப்போவது யார்?
சரிகமப சீசன் 5 ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale நேரலை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
அரங்கம் ழுமுவதும் அன்பால் சேர்ந்த மக்களால் நிறைந்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லா வயது மட்டத்திலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.

ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale இன்று மாலை 5 மணிக்கு ஆரம்மாகி நேரலையில் ஒளிபரப்பட்டுவருகின்றது.
அதில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக சுஷாந்திக்கா ஸ்ரீஹரி, சபேஷன் , சின்னு செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் லைட்டிலுக்காக போட்டிபேடவுள்ளனர்.

இந்நிலையில், அரங்கம் அதிரும் சத்தத்துடன் சரிகமப ரசிகர்கர்கள் கூட்டம் எங்கும் வியாபித்திருக்கும் காட்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது அன்பால சேர்ந்த கூட்டம்.. என குறிப்பிட்டு காணொளியாக வெளியிட்டுள்ளது. குறித்த காணொளிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |