சரிகமப - வில் தத்ரூபமாக SPB போல் பாடிய ஸ்ரீ ஹரி! அரங்கமே வியப்பில் ஆழ்ந்த தருணம்
காதலே காதலே என்னை என்ன செய்ய போகிறாய்... என்ற பாடலை உருகவைக்கும் குரலில் பாடிய சரிகமப சீசன் 5 போட்டியாளர் ஸ்ரீ ஹரியின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப. அதன் சீசன் 5 தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது Paadum Nila SPB சுற்று நடைபெற்று வருகின்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் SPB ஆல் பாடப்பட்ட சிறப்பான பாடல்களை பாடயுள்ளனர்.
இந்நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியில் அற்புதமாக பாட்டு பாடு அசத்தி வரும் ஸ்ரீ ஹரி காதலே காதலே என்னை என்ன செய்ய போகிறாய்... என்ற பாடலை தத்ரூபமாக SPB யே பாடியது போல் பாடியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |