சரிகமப - வில் வாய்ப்பு கிடைத்தும் பாட முடியாமல் போன போட்டியாளர்...மீண்டும் சென்னையில்
சரிகமப நிகழ்ச்சியில் அகதியாக பங்கேற்றிய போட்டியாளர் பிரஷான் மீண்டும் சென்னை வந்திருப்பதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
சரிகமப
ஈழத்திலிருந்து அகதியாக சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்த இளைஞர் தான் போட்டியாளர் பிரஷான். தன் பாடல் திறமையை காட்டி சரிகமப நிகழ்ச்சியில் அனைவரின் மனங்களையும் வென்றிருந்தார்.
கடந்த லிட்டில் சேம்ஸ் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது தற்போது சீனியர் சீசன் 5 ஆரம்பமாகி உள்ளது. இதில் மெஹா ஓடிசனில் போட்டியாளர் பிரஷான் என்பவர் கலந்துகொண்டிருந்தார்.
இவர் சிறப்பாக பாடல் பாடி போட்டிக்கு தெரிவும் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சோகமான ஒரு விடயம் என்வென்றால் இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான்.
இவருக்கு இந்த விசா பிரச்சனையின் காரணமாக திரும்பவும் நிகழ்ச்சியில் தொடரமுடியாமல் போனது அனைவரையும் உருக வைத்தது. இந்த நிலையில் தற்போது சுவீஸ் நாட்டிற்கு சென்று மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.
இதன்போது ஒரு காணொளியும் வெளியிட்டுள்ளார். அதாவது சவீஜ் சென்று சென்னை வந்துள்ளதாகவும் வீசா இன்னும் சரி வரவில்லை என்றும் அதற்காக மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |