சரிகமப - வில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்ட இறுதிச்சுற்று போட்டியாளர் யார்?
சரிகமப வில் இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டு வரப்படுகின்றது. இதில் யார் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை பார்க்கலாம்.
சரிகமப
சரிகமப வில் தற்போது இறுதி சுற்றுக்கான போட்டியாளர் தெரிவு நெடைபெறுகின்றது. அதாவது இறுதிச்சுற்று வரை மொத்தம் 12 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
இதில் கடந்த வாரம் போட்டியாளர் சுஷாந்திக்கா இறுதிச்சுற்றின் முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதே போல இந்த வாரம் கோல்டன் பெர்போமன்ஸ் பெறும் போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்படுவார்.
இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர்
அந்த வகையில் ஓல் இஸ் கோல்ட் சுற்று நடைபெற்றது. இதில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் பாராட்டை பெற்றிருந்தனர்.
இருந்தும் இதில் இருந்து ஒரு போட்டியாளர்கள் கூட இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யபட்டவில்லை. இதில் நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறும்போது “பழைய பாடல்களின் சுற்று மிகவும் கஷ்டமான சுற்றாகும்.
இதில் பாடிய அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடி இருந்தீர்கள். ஆனால் இன்னும் நன்றாக பாடக்கூடிய போட்டியாளர்கள் இன்று ஒழுங்காக பாடவில்லை. இக்காலத்து தலைமுறைக்கு இந்த பாடல்கள் மிகவம் சவாலான ஒரு விடயம்.
அதனால் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் அடுத்த வாரம் தெரிவு செய்யப்படுவார் என கூறினார்”. எனவே அடுத்த வாரம் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |