இனியும் தாமதிக்காதீங்க.. விழித்திரை பாதுகாக்கும் உணவுகள்- அடிக்கடி சாப்பிடுங்க!
பொதுவாக உடம்பிலுள்ள கண்கள் ஆன்மாக்களின் ஜன்னல்கள் என பலரும் கூறுவார்கள். அந்த ஜன்னல்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
இன்றைய அவசர உலகில் மொபைல்/கணினி போன்ற திரை சார்ந்த சாதனங்களை பார்ப்பதற்கு அதிகமாகி விட்டது. இதனால் உங்கள் கண்கள் பார்ப்பதற்கு சோர்வாகவும், வறட்சியாகவும் காணப்படும். இந்த பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் கண் பார்வை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
வழக்கமான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் வாயிலாக நாம் கண்களில் பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெறும் வெளிப்புற பாதுகாப்பு பழக்கங்களை மாத்திரம் கொண்டு கண்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியாது. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களும் அவசியம்.
கண்களின் ஆரோக்கியத்தை வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் பாதுகாக்கிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும் கண்களின் ஆரோக்கியம் உள்ளது என கூறுவார்கள்.
அந்த வகையில் கண்களின் அழகை அப்படியே பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. வைட்டமின் A
வைட்டமின் A சத்து கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவை. இந்த சத்து கண்களின் ஆரோக்கியத்தை இரவு நேரங்களில் பாதுகாப்பதுடன் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது. வைட்டமின் A சத்துக்கள் கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் காய்கறிகளில் உள்ளன.
2. ஆக்ஸிஜனேற்றிகள், துத்தநாகம்
வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவுகளை (AMD)சரிச் செய்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் கண்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இவற்றை சிட்ரஸ் பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் கடல் உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது துத்தநாகம் கிடைக்கும். இது உங்களின் கண்களின் விழித்திரையை பாதுகாக்கிறது.
3. லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின்
கீரை, முட்டைக்கோஸ், சோளம் ஆகிய காய்கறிகளில் இயற்கை நிறமிகள் உள்ளன. இவை உட்புற சன்கிளாஸ்கள் போன்று செயற்பட்டு நீல ஒளியைத் தடுத்து, விழித்திரை சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும். கரோட்டினாய்டுகள் நிறைந்த உணவுகள் AMD மற்றும் கண்புரை அபாயத்தை குறைப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |