பிக் பாஸ் வீட்டை புரட்டிப்போட்ட நந்தினி - ஒரு நாளைக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தால் வௌயேறிச்சென்ற போட்டியாளர் நந்தினியின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
தற்போது ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும் தற்போது பரபரப்பாக ஒடிக்கொண்டு இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக இருந்தது. எதோ ஒரு காரணத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்ணும் போல தோன்றுகிறது.
இதில் சக போட்டியாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு போட்டியை விட்டு தானாகவே வெளியேறிச்சென்ற போட்டியாளர் தான் நந்தினி. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார் என சக போட்டியாளர்கள் அவரை கிண்டலடித்து பேசினார்கள்.
இதனால், ஆத்திரமடைந்த நந்தினி தனியாக சென்று அழுதார். அவரை சமாதானப்படுத்த பலர் முயற்சி செய்தும், யாரும் கிட்டவராதீங்க என ஆக்ரோஷமாக கத்தினார். இதன் பின்விளைவாக வெளியேற்றவும் பட்டார்.
ஒரு நாள் சம்பளம்
இங்க யாரும் ரியாலிட்டி இல்லை, என்னால் பொய் வாழ்க்கை நடத்த முடியாது என்று வெளிப்படையாக பேச நீங்கள் வெளியே போகலாம் என்று பிக்பாஸ் சொன்னதும், பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி வெளியேறினார்.
தற்போது,பிக் பாஸ் ஐந்து நாட்கள் இருந்த நந்தினி பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நந்தினிக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று பேசப்பட்டிருந்தது.
அப்படி பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் நந்தினி ஐந்து நாட்கள் இருந்ததால், அவருக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |