சரிகமப - வில் மெய்சிலிர்க்க பாடி கன்னத்தில் முத்தம் வாங்கிய போட்டியாளர்
சரிகமப வில் பழைய பாடலுக்கு உயிர் கொடுக்கும் அளவில் மெய்சிலிர்க்க போட்டியாளர் ஸ்ரீஹரி பாடி இருந்தார்.
சரிகமப
சரிகமப வில் தற்போது இறுதி சுற்றுக்கான போட்டியாளர் தெரிவு நெடைபெறுகின்றது. அதாவது இறுதிச்சுற்று வரை மொத்தம் 12 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
இதில் கடந்த வாரம் போட்டியாளர் சுஷாந்திக்கா இறுதிச்சுற்றின் முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதே போல இந்த வாரம் கோல்டன் பெர்போமன்ஸ் பெறும் போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்படுவார்.
அந்த வகையில் போட்டியாளர் 'ஊடல் அவளது வாடிக்கை' என்ற பாடலை பாடி நடுவர்களை மற்றும் மக்களை கவர்ந்து இருந்தார்.
இவர் பாடிய பாடலுக்கு இசையமைப்பாளர் டி.எல் மகாராஜன் கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார்.
இது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்த தருணமாக இருந்தது. இந்த நிலையில் இவருக்கு கோல்டன் பெர்போமன்ஸ் உம் கொடுக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |