சரிகமப - வில் கனிந்த குரலால் பாடி உள்ளம் கரைத்த போட்டியாளர் - தேடாமல் கிடைத்த வாய்ப்பு
சரிகமப OLD is GoLD சுற்றில் பவித்ரா தன்குரல் அமைப்பிலே பழைய பாட்டை பாடியது ஒட்டுமொத்த அரங்கத்தையும் ஈர்த்திருந்தது. இதன் மூலம் அவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப வில் தற்போது இறுதி சுற்றுக்கான போட்டியாளர் தெரிவு நெடைபெறுகின்றது. அதாவது இறுதிச்சுற்று வரை மொத்தம் 12 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
இதில் கடந்த வாரம் போட்டியாளர் சுஷாந்திக்கா இறுதிச்சுற்றின் முதல் போட்டியாளராக தெரிவு செய்யபட்டிருந்தார்.
அதே போல இந்த வாரம் கோல்டன் பெர்போமன்ஸ் பெறும் போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்படுவார்.
அந்த வகையில் தற்போது போட்டியாளர் பவித்ரா பாடிய காணொளி வெளியாகி உள்ளது. பவித்ரா “இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி” என்ற பாடலை பாடி இருந்தார்.
பாடலை கேட்கும் போதே உள்ளம் கரைந்து போகும் அளவிற்கு பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் டி.எல் மகாராஜன் கலந்துகொண்டிருந்தார்.
அவர் பவித்ராவின் பாடல் திறமையை பார்த்து “நான் செய்யும் ஆல்பத்தில் நீங்க பாட வேண்டும்” என கூறி இரந்தார். இது பவித்ராவின் பாடல் திறமைக்கு எதிர்பாராமல் வந்த வாய்ப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |