சரிகமப (5) இல் - தவறாமல் கோல்டன் பெர்போமன்ஸ் - வெற்றி வாகை சூடுவரா?
சரிகமபவில் இதுவரை நடைபெற்று வரும் சுற்றுக்களில் தவறாமல் கோல்டன் பெர்போமன்ஸ் வாங்கி கொண்டு வரும் போட்டியாளர்.
சரிகமப (5)
சரிகமப வில் திறமையான போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 23 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சிலர் போட்டியில் இருந்து வாக்கு அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் போட்டியாளர் சபேசன் இலங்கையை சேர்ந்தவர். இவர் இலங்கை பிரபல டிவி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சீசன் 5 இல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதன் பின் தற்போது இந்தியா தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி தன் சிறப்பான திறமையை காட்டி வருகிறார். இவர் இதுவரை சரிகமப வில் நடந்த அனைத்து சுற்றுக்களிலும் கோல்டன் பெர்போமஸ் வாங்கி வருகிறார்.
நேற்று நடைபெற்ற பக்தி பாடல் சுற்றிலும் ஐயப்பன் பாடல் பாடி எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார் போட்டியாளர் கபேசன். இந்த பக்தி பாடல் சுற்றிலும் சபேசன் கேல்டன் பெர்போமன்ஸ் பெற்றிருந்தார்.
இவர் ஒவ்வொரு வாரமும் போல்டன் பெர்போமன்ஸ் வாங்கி வருகிறார் என நடுவர் ஸ்ரீனிவாஸ் கடந்த வார சுற்றில் கூறியிருப்பார். இதனை தொடர்ந்து போட்டியாளர் சபேசன் இப்படியே பாடி முன்னேறி வந்தால் வெற்றி மகுடம் சூட வாய்ப்பு உள்ளது என மக்கள் கருத்து தெரிவத்து வருகின்றனர்.
இதில் வெற்றி மகுடம் சூடும் போட்டியாளருக்கு சரிகமப நிகழ்ச்சி மூலம் 60 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீடு பரிசளிக்கப்பட உள்ளது. யாரு அந்த வாய்ப்பை தட்டிச்செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |