இலங்கை பாடகர் சபேசனுக்கு பாடகர் எஸ்.பி.சரண் கொடுத்த பரிசு! நெகிழ்ச்சியான தருணம்
சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு சரிகமப நடுவர் மற்றும் பாடகர் எஸ்.பி.சரண் கொடுத்துள்ள மறக்க முடியாத பரிசு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.

இந்த சீசன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்த பாடல் திறமையாளர்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்கு பெரிய தளம் அமைத்துக் கொடுத்தது என்றால் மிகையாகாது.
இந்தநிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று முதல் ரன்னர் அப் ஆக தெரிவானார். சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நாடு விட்டு நாடு வந்து, உறவினர்கள் இல்லாமல் தனியாக போராடி ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சபேசனுக்கு, யாரும் எதிர்பாராத வகையில், பாடகர் எஸ்.பி.சரண், சபேசன் Band உருவாக்கி கொடுத்துள்ளார்.

மேலும் அவரது முதல் ஷோவிற்கும் நான் வருவேன் என கூறியுள்ளார்.குறித்த விடயம் சபேசன் வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |