Saregamapa Grand Finale: 6 போட்டியாரளர்களில் வெற்றி மகுடம் யாருக்கு? வைரலாகும் promo
சரிகமப வில் ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்து ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள செம மாஸ் காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியானது தற்போது, ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale க்கு தயாராகி வருகின்றது.
அதில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக சுஷாந்திக்கா ஸ்ரீஹரி, சபேஷன் , சின்னு செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இதில் யாரோ ஒருவர் தான் வெற்றியாளராக மகுடம் சூட முடியும் என்ற நிலையில், Grand Finale க்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் செம மாஸாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள Grand Finale promo காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |