சரிகமப (5) - இல் போட்டியாளர் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு - உடனடியாக வெளியேறிய தருணம்
சரிகமப வில் மேடையில் பாடி முடிந்த கையுடன் கேள்விபட்ட சோகமான செய்திக்காக அரங்கத்தை விட்டு வெளியேறினார் போட்டியாளர்.
சரிகமப (5)
இந்த வாரம் "டெடிகேஷன் ரௌண்ட்" என்ற சிறப்புத் தொகுப்பாக ஒளிபரப்பாகி வந்த சரிகமபா நிகழ்ச்சியில், போட்டியாளர் அருண், தனது அம்மாவிற்காக ஒரு உருக்கமான பாடலை பாடினார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா, பாடல் முடிந்ததும் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார். அருண் பாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரது பாட்டி (தாயம்மா) காலமானதாக தெரியவந்தது.
ஆனால், போட்டியில் கவனம் சிதறக்கூடாதென்பதற்காக, இந்த தகவலை அவருடைய தாய் மறைத்திருந்தார்.
அருண் பாடலை முடித்ததும், தொகுப்பாளினி இந்த தகவலை அவரிடம் நேரடியாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். பின்னர், அருணின் பாட்டிக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |