கிணறுகள் வட்ட வடிவில் இருப்பது ஏன்? பின்னணி காரணம்
மனிதனால் உருவாக்கபட்ட கிணறுகள் மற்றைய சதுரம் முக்கோணம் போன்ற வடிவங்களை விட வட்ட வடிவத்தில் இருக்க ஒரு முக்கியமான காரணம் உள்ளது.
கிணறுகள் ஏன் வட்ட வடிமாக உள்ளது
மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே கிணறுகள் நம்பகமான நீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏன் ஒரு கிணறு எப்போதும் வட்ட வடிவமாகத்தான் இருக்கிறது என்பதை.
ஏன் சதுரம், முக்கோணம் அல்லது பிற வடிவங்களில் இரந்து இருக்கலாமே! இது பாரம்பரியத்தையே தொடர்கின்றன என்பதே காரணம் என்று சிலர் நம்பினாலும், உண்மை அது அல்ல. வட்ட வடிவத்தின் அறிவியல்லுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு சுவாரஷ்ய காரணம் உள்ளது.
காரணம் என்ன?
கிணற்றை தோண்டும்போது அதன் சுற்றியுள்ள மண் மையம் நோக்கி அழுத்தம் செலுத்துகிறது. இந்த அழுத்தம் ஒட்டுமொத்தமாக, சமமாக விநியோகிக்கப்பட வேண்டுமானால் கட்டமைப்பு வட்டமாக இருக்க வேண்டும்.
வட்ட வடிவம் அனைத்து திசைகளிலும் அழுத்தத்தை 360 டிகிரிகளாக சமமாக பரப்புகிறது. இதனால் சுவர்களில் அழுத்தம் சீராகும், விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
எதிர்பாராத முறையில், சதுரம் அல்லது முக்கோண வடிவம் கொண்ட கிணறுகள் மூலைப்பகுதிகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த இடங்களில் விரிசல்கள் உருவாக வாய்ப்பு அதிகம், இது காலப்போக்கில் கட்டமைப்பை சிதைக்கும்.
நவீன தொழில்நுட்பம்
இன்றைய காலத்திலும், துளையிடும் இயந்திரங்கள் பொதுவாக வட்ட வடிவ துளைகளையே உருவாக்குகின்றன. ஏனெனில் அந்த வடிவம் கட்டுமானத்திற்கு அதிக வலிமை தருவதோடு, இயற்கையான அழுத்தங்களை சமமாக கையாளும் திறனையும் கொண்டுள்ளது.
வட்ட வடிவ கிணறு என்பது பாரம்பரியத்தில் இருந்து வந்த பழக்கம் மட்டும் அல்ல. அது அறிவியலுக்கும், நிலைத்தன்மைக்கும் ஒத்துவரும் ஒரு சிறந்த வடிவமைப்பாகும்.
அதனால்தான் நம் பாட்டனார் தோண்டிய கிணறும், இன்று தோண்டப்படும் புது கிணற்றும் ஒரே வடிவத்தில் இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
