சரிகமப-வில் எதிர்பாராமல் வெளியேற்றிய போட்டியாளர்: கண்ணீரில் நிரம்பிய தருணம்
சரிகமபவில் கடந்த வார பக்தி திருவிழா சுற்றுடன் எதிர்பாராத போட்டியாளர்களாக வெளியேறி சென்றவர்களின் தகவல் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கடந்த வாரம் போட்டியில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. இந்த வாரம் பக்தி திருவிழா சுற்று இனிதே நடந்து முடிந்தது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் ஊர்த்திருவிழா சம்பந்தப்பட்ட பாடல்களை சிறப்பாக பாடி இருந்தனர்.
எனினும் இந்த சுற்றில் Golden performance வாங்காத போட்டியாளர்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு வாங்குகள் வழங்கப்பட்டிருந்தது.
அவர்கள் யோகஸ்ரீ, ஷ்ரக், ஷ்ரஜான்வீ, அக்ஷதா போன்ற நான்கு போட்டியாளர்கள் Golden performance வாங்காத காரணத்தினால் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த நான்கு போட்டியாளர்களில் இருந்து இருவர் அடுத்த சுற்றுக்கு தெரிவாகப்பட்டனர். அவர்கள் யோகஸ்ரீ மற்றும் ஷரக் என்போராவர்.
இந்த நிலையில் மிக சிறப்பான பெர்போமன்ஸ் கொடுத்தும் மக்கள் வாக்குகள் அடிப்படையில் போட்டியை விட்டு எதிர்பாராமல் அக்ஷதா மற்றும் ஷ்ரஜான்வீ கண்ணீருடன் வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த இசை நிகழ்ச்சி அடுத்த வாரம் புதிய சுற்றுடன் Ticket to Finale வில் சந்திக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |