சரிகமப: இறுதிச்சுற்றுக்கு 6 ஆவது போட்டியாளராக தெரிவான பவித்ரா! அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்
சரிகமப வில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச்சுற்று போட்டியாளர்களாக தெரிவு செய்யபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி தருணத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பவித்ரா 6ஆவது இறுதி சுற்று போட்டியாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தில் அவருக்காக அரங்கமே கண்ணீர்விட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் இடம்பெற்று வந்த நிலையில், ஷிவானி 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.
ஏற்கனவே, சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன் என 4 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் இறுதியாக 5வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்கான Ticket to finale ரவுண்ட் நடந்துள்ளது. அதில் சிறப்பாக பாடிய ஷிவானி தான் சரிகமப சீசன் 5ன் 5ஆவது இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வளவு தான் என முடிவான பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் வாக்கின் அடிப்படையில் 6 ஆவது இறுதி சுற்று போட்டியாளராக பவித்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்போது பவித்ராவின் ரியாக்ஷன் மற்றும் அவரது குழந்தை மேடைக்கு ஓடிவந்த தருணம் என்பன அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காணொளி தற்போது வெளியாகி அசுர வேகத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |