உங்கள் பட்டுப் புடவையில் கறை படிந்துவிட்டதா? கவலைய விடுங்க...
எத்தனை உடைகள் வந்தாலும் பட்டுப் புடவைகளுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. எத்தனை ரக புடவைகள் இருந்தாலும் பட்டுப் புடவைகளுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தங்க நகைகளுக்கு சமமாக பெண்கள் பட்டுப்புடவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அந்தப் புடவையில் கறை படிந்துவிட்டால் அது அவர்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கும். இந்த கறைகளை நீக்குவதற்கு பெரிதாக சிரமப்படத் தேவையில்லை.
பட்டுப்புடவையில் எண்ணெய் கறை பட்டால் அந்த இடத்துக்கு முகத்துக்கு போடும் பவுடரை கொட்டி, மெல்லிய பருத்தி துணி வைத்து லேசாக தேய்க்க வேண்டும்.
குளிர்ந்த நீரில் பருத்தி துணியை நனைத்து பவுடர் கறையிருக்கும் இடத்தில் இலேசாக துடைத்து விடலாம். அது காய்ந்த பிறகு பவுடர் கறை இல்லாமல் போய்விடும்.
குளிர்ந்த நீரில் ஷெம்பூ கலந்து கறை இருக்கும் இடத்தில் மாத்திரம் முக்கி எடுத்தால் கறை நீங்கி விடும். பட்டுப் புடவையில் கறை இருக்கும் பகுதியில் கிளிசரினை பட்ஸ் வைத்து லேசாக தேய்க்க வேண்டும்.
கறை இருக்கும் பகுதியில் மாத்திரமே இதை தேய்க்க வேண்டும். துடைக்கும்போதே கறைகள் வந்துவிடும். மிகவும் அழுத்தி துடைக்கக் கூடாது.