சரத்குமாரின் முதல் மனைவி இப்போ என்ன பண்றாங்க- ன்னு தெரியுமா..?
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சரத்குமார்
தமிழ் சினிமாவில் “புலன் விசாரணை” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த சரத்குமார் நீண்ட நாட்களுக்கு பின்னர் கோலிவுட்டின் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் வாரிசு திரைப்படம் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது பிரபல நடிகை ராதிகாவுடன் வாழ்ந்து வரும் சரத்குமார் கடந்த 1984ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் என்ற மகளும் இருக்கின்றது.
முதல் மனைவி தற்போது என்ன செய்கிறார்?
இதனை தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டு சாயா தேவியை விவாகரத்து செய்து விட்டு 2001 ஆம் ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விவாகரத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் பங்குக் கொள்ளாத சாயா தேவி, சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அப்போது,“ நாங்கள் இருவரும் விவாகரத்து செய்யும் போது வரலட்சுமி சிறு பிள்ளையாக இருந்தார்.
பிள்ளைகளுக்கு தாய் - தந்தை இருவரும் முக்கியம். மேலும் விவாகரத்து செய்த பின்னர் பெண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதே தான் எனக்கும் நடந்தது.
மேலும், சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி வருவதாக சாயா தேவி கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ சாயாவிற்குள் இப்படியொரு நல்லக்குணமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |