ராதிகா பிறந்த நாளில் குட்நியூஸ் சொன்ன மகன்.. வெறித்தனமான வொர்கவுட்டில் சரத்குமார்
நடிகர் சரத்குமார் வயதான காலத்திலும் வெறித்தனமாக வொர்கவுட் செய்து வரும் வேளையில், அவருடைய மகன் அவருக்காக வெளியிட்ட பதிவு இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் சரத்குமார்.
இவர், சினிமாவில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி அதன்பின்னர் மக்கள் விரும்பும் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் சரத்குமார் அவ்வப்போது படங்களிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் '3BHK' என்ற திரைப்படம் வெளியானது.
குட்நியூஸ் சொன்ன மகன்
இந்த நிலையில், சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவின் பிறந்த நாள், இதற்கு வீட்டிலுள்ளவர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த சமயத்தில் சரத்குமார்- ராதிகாவின் மகன் ஒரு புகைப்படத்துடன் முக்கியமான தகவலொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “எனக்காக என்னுடைய அப்பா எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். அவர் உண்மையிலேயே என் சூப்பர் ஹீரோ, என் சிறந்த நண்பர், என் வெளிச்சம். நான் வேறு நாட்டிற்குச் சென்று படிக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் தனது நேரத்தை தியாகம் செய்த ஒரு மனிதனுக்கு, நான் செய்யக்கூடியது அவரை உலகின் மகிழ்ச்சியான மனிதனாக மாற்றுவதுதான்.
நேற்றைய தினம் நான் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்வு பெற்றேன். இந்த விடயத்தை கூறிய போது என்னுடைய அப்பாவின் மகிழ்ச்சியை அவருடைய முகத்தில் பார்த்தேன். என் அப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ் என்ற மனிதருக்கு, நான் சொல்ல விரும்புகிறேன், மிஸ்டர் வாசுதேவன், உங்கள் மகன் வெற்றி பெற்றான், நான் உங்களை நேசிக்கிறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
இந்த பதிவு வந்த சமயத்தில், வொர்கவுட் காணொளியொன்றையும் சரத்குமார் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் சரத்குமார் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |