தல பொங்கலுக்கு புது மாப்பிள்ளை ஒதுக்கிய சரத்குமார்- ரியாக்ஷன் பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
தல பொங்கல் கொண்டாட்டத்தில் இருக்கும் வரலட்சுமி சரத்குமார் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.
இந்த நிலையில், கடந்த வருடம் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம்.
தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரையில் வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் சொந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
தல பொங்கல் கொண்டாட்டம்
இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் தல பொங்கல் தினம் கொண்டாடியுள்ளார்.
அப்போது, நடிகர் சரத்குமார்- ராதிகா சரத்குமார், சாயா தேவி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அனைத்து குடும்பமும் ஒன்றாக க்ரூப் போட்டோ எடுக்க ரெடியாக இருக்கிறார்கள்.
“உங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் வந்தாச்சான்னு..” போட்டோகிராஃபர் கேட்க, எங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் வந்தாச்சு என சரத்குமார் சொல்ல, சின்ராசு போல ஒரு ஓரமாக வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிற்கிறார்.
இந்த காணொளி அவர்களின் ஒற்றுமையையும், குடும்ப மகிழ்ச்சியையும் வெளிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பை பெற்றும் வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |