மகள் பல் மருத்துவர், மகனுக்கு பிரான்சில் படிப்பு... உதவியாளருக்கு சரத்குமார் செய்த உதவி!
நடிகர் சரத்குமார், தன்னிடம் உதவியாளராக பணியாற்றும் முத்து என்ற நபருக்கு செய்துள்ள பல்வேறு உதவிகள் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்ட விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சினிமா துறையில், நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் போன்றோர் பிரபலமாக இருக்கன்றார்கள். ஆனால், அவர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றும் சாமானியர்கள் குறித்து எந்த தகவல்களும் பெரும்பாலும் வெளிவருவது கிடையாது.
நடிகர் சரத்குமார்
தென்னிந்திய சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் 70 வயதை கடந்த பிறகும் அதே இளமையோடு அவர் இருக்கிறார். அதோடு பிட்னஸிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான 3 பிஹெச் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தேவயானி தான் ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு இவர்களுடைய மகனாக சித்தார்த் நடித்திருக்கிறார். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நடுத்தர குடும்பத்தை பற்றி தான் இந்த படம் இருந்து வருகிறது.
'3BHK' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தொகுத்து வழங்கினார்.
அதன் போது, நடிகர் சரத்குமார் மற்றும் அவரது உதவியாளர் முத்து என்பவர் குறித்து பலரும் தெரியாத சில சுவாரசிய தகவல்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில், நடிகர் சரத்குமாரின் உதவியாளர் முத்து ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.முத்துவின் மகள் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும், இவருடைய மகன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு ஃபேஷன் டிசைன் பயின்று வருகிறார்.
இவைஅனைத்திற்கும் சரத்குமார் தான் காரணம் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருவதுடன் பலரையும் நெகிழ்ச்சியில் அழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |