புதிய தொழிலில் இறங்கிய சச்சின் மகள்- பெருமையுடன் வாழ்த்து தெரிவித்த தந்தை
கிரிக்கட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் அவரின் மகளின் புதிய பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
சச்சின் மகள் சாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அவ்வப்போது வீட்டில் நடக்கும் விஷேசங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில், மகள் சாரா டெண்டுல்கர் பல தொழில்களை ஆரம்பித்து செய்து வருகிறார். இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
“கம் அண்ட் சே ஜி டே” என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. இது 130 மில்லியன் டாலர்கள்(ரூ.1140 கோடி) மதிப்புமிக்கது. இந்த விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருந்தார்.
புதிய தொழில் ஆரம்பம்
இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையமொன்றை ஆரம்பித்துள்ளார். துபாய்யை மையமாக கொண்ட இந்த பைலேட்ஸ் அகாடமியின் கிளையாக மும்பையில் இந்த புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தேரி பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகாடமியின் கிராண்ட் லான்ச் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.
சாரா டெண்டுல்கர் ஊட்டச்சத்து நிபுணராக இருந்தும் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையியல் பயின்றிருக்கிறார். இதனால் பைலேட்ஸ் என்ற மனம் மற்றும் உடலை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சி முறை நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகளுக்காக நிற்கும் தந்தையாக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
