25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் எளிமையான முறையில் வாழ்க்யைில் முன்னேற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
அதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடும் எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை சொந்த திறமைகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குறுகிய சிலரே இருக்கின்றார்கள்.
அந்த வகையில் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடிய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.
ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்து தள்ளிய பெருமையும் இவரையே சாரும்.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காத ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையை போல் கிரிக்கெட்டை தன் இலக்காக கொண்டுள்ளார்.
சாரா டெண்டுல்கர் அம்மாவை போல் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ மேல் படிப்பை லண்டனில் படித்தார்.
இவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனிலிருந்து டிஸ்டின்க்ஷன் பெற்று மாஸ்டர் டிகிரியை முடித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளாமல் தன்னுடைய திறமைக்கு ஏற்ப தனித்துவமான பாதையை அமைத்து முன்னேறி வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் 6.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களுடன் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அது அவருடைய வெற்றிகரமாக வாழ்வை பறைசாற்றுவதாக அமைகின்றது.
மேலும் Economic Times பத்திரிக்கையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டில் சாரா டெண்டல்கரின் மொத்த சொத்து மதிப்பு 50 லட்சங்கள் முதல் 1 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
சாரா டெண்டுல்கர் ஷாப் என்ற பெயரில் இவர் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் கொரிய அழகு பிராண்ட்டான Laneige-க்கு இந்திய அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |