Sara Tarot Reader : மகா கந்த சஷ்டியில் 12 ராசிகளுக்கும் முருகனின் அருள்வாக்கு!
முருகப்பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாக மகா கந்த சஷ்டி விரதம் போற்றப்படுகிறது. ஆறுபடை வீடுகளின் நாயகனாகவும், பக்தர்களின் துயர் தீர்க்கும் கலியுகக் கடவுளாகவும் விளங்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபடுவதற்கான சிறப்புமிக்க காலமாக இந்த மகா கந்த சஷ்டி அமைகிறது.
முருகப்பெருமான் சொல்லும் செய்தி
மகா கந்த சஷ்டி காலத்தில் முருகப்பெருமானை முழு மனதுடன் நினைத்து, பக்தியுடனும் நம்பிக்கையுடனும் விரதம் இருந்து வழிபட்டால் மனக்கவலைகள் நீங்கி, வாழ்க்கையில் நிலவும் தடைகள் அகன்று, பாவங்கள் மற்றும் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை திகழ்கின்றது.

மேலும், முருகப்பெருமானின் அருளால் மனத்துணிவு, நம்பிக்கை, அமைதி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய மகத்துவம் நிறைந்த மகா கந்த சஷ்டி திருநாளில், மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் முருகப்பெருமான் வழங்கும் ஆன்மிகச் செய்தி என்ன?
ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? எத்தகைய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? முருகப்பெருமானின் அருளாசி உங்கள் ராசிக்கு உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் என்ன? என்பது குறித்து இந்தக் காணொளியில் விரிவாகக் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |