சிம்ம ராசிக்குள் நுழைந்த செவ்வாய்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?
Mars Transit these Zodiac Careful: இன்று ஏற்பட்ட செவ்வாய் பெயர்ச்சியால் எந்த மூன்று ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை இவற்றிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றார்.
கிரகங்களின் தளபதியாக இருக்கும் செவ்வாய் 45 நாட்கள் வரை ஒரு ராசியில் இருப்பார். மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக இருக்கின்றார்.
இதுவரை கடக ராசியில் பயணித்து வந்த செவ்வாய் இன்று சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியினால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படுகின்றது.
சில ராசியினருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். சிம்ம ராசிக்கு சென்ற செவ்வாயால் எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கன்னி
கன்னி ராசியில் செவ்வாய் 12வது வீட்டில் இருக்கும் நிலையில் பணவிடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதுடன், மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ஆரோக்கிய பிரச்சனையில் அதிக சிரமம் இருக்கும். பணியிடத்திலும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலக்கட்டத்தில் உங்களது தன்னம்பிக்கை, தைரியம் குறையுமாம்.

மகரம்
மகர ராசியினரின் 8வது வீட்டில் செவ்வாய் சென்றுள்ளார். இந்த காலக்கட்டத்தில் இந்த ராசியினர் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். பணியிடமும் பரபரப்பாக இருக்குமாம்.
பண விடயம் மற்றும் பண பரிவர்த்தனையில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முக்கியமாக பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

மீனம்
மீன ராசியில் 6வது வீட்டில் செவ்வாய் சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த ராசியினர் பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். வேலைகளில் தடைகளையும் சந்திக்க நேரிடும்.
ஆரோக்கிய விடயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இல்லையெனில் மிகப்பெரிய மருத்துவ செலவுகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |