சப்போட்டா பழத்தில் இப்படி ஒரு சுவையான அல்வா சாப்பிடத்துண்டா?
பழங்கள் எப்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தான் தரும். அந்த வகையில் சப்போட்டா பழம் பழ நன்மைகளை தருகிறது.
இவை, மூல நோய், பித்தம், குடல் புற்று நோய், என பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
இப்படி பல நன்மைகளை கொண்ட இந்த சப்போட்டா பழத்தை வைத்து ஒரு அல்வா அல்வா ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சப்போட்டா பழம் – 1/4 கிலோ, முந்திரி – 10, நெய் -2 டேபிள் ஸ்பூன், ரவை – 1/2 கப், வெல்லம் – ஒரு கப்.
செய்முறை விளக்கம்
முதலில் சப்போட்டா பழத்தை நன்கு கழுவிக்கொண்டு மேலே உள்ள தோல் மற்றும் கொட்டைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து, ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள முந்திரியை போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்து விடுங்கள்.
அதன் பிறகு, அதே கடாய்யில் ரவையை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். ரவை நன்றாக வறுபட்டவுடன் அரை கப் ரவைக்கு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ரவையை கட்டி படாமல் நன்றாக கலந்து விடுங்கள்.
ரவை வெந்த பின் அரைத்து வைத்திருக்கும் சப்போட்டா பழ பேஸ்ட்டை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
பின்னர், வெள்ளம், நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள்.
ஒரு பத்து நிமிடம் இப்படி கிளறினாலே போதும் கடாயில் ஒட்டாத அளவிற்கு, ரவை சப்போட்டா வெல்லம் எல்லாம் நன்றாக கலந்து சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து விடும்.
இதன் மேல் வறுத்து வைத்துள்ள முந்திரியை போட்டு இறக்கி விட்டால் அவ்வளவு தான் சுவையான சப்போட்டா பழ அல்வா ரெடி!