இது கூட அவர் சொன்னது தான்.. சந்தானத்தின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சந்தானத்தின் மகள் தற்போது என்ன செய்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சந்தானம்
நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சந்தானம்.
இவர், விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார்.
அதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் தற்போது “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகியுள்ளது.
மகள் என்ன செய்கிறார்?
இந்த நிலையில், சந்தானம் மற்றும் அவரின் குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஈடுபட்ட போது சில விடயங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் சந்தானம் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில், தொகுப்பாளர் ஒருவர், “ நீங்கள் வரவர ரொம்ப அழகாகவும் நேர்த்தியாகவும் ஆடைகளை அணிகிறீர்கள்? என்ன காரணம் என கேட்கிறார்.
அதற்கு சந்தானம், “வேறு ஒன்றும் இல்லை எல்லாம் என்னுடைய பொண்ணு தான். அவர் தான் எனக்கான ஆடைகள் மற்றும் சிகை அலங்காரம் எல்லாவற்றையும் கூறுவார்... படத்தில் நான் அணிந்திருக்கும் ஸ்டைலை கூட 1, 1/2 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு கூறினார். அதை தான் படத்திலும் வைத்திருக்கிறேன். அவர் fashion technology படித்து கொண்டிருக்கிறார்...” என கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |