தாய்மாமன் சஞ்சீவின் அக்கா மகள் திருமணத்தில் தளபதி விஜய்! யார் மாப்பிள்ளை தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
பிக் பாஸ் சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்ற தகவலும் கடந்த சில நாட்களாக இணையத்தில் உலாவி வருகின்றது.
சஞ்சீவின் அக்கா பெயர் சிந்து. அவர் ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சிந்துவுக்கு ஆஸ்துமா, நுரையீரல் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக 33 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
சிந்து இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஸ்ரேயா என்னும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வந்துள்ளார்.
பின்னர் ஸ்ரேயாவுக்கும் அஸ்வின் ராம் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்தில் நடிகர் விஜயும் கலந்து கொண்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
சஞ்சீவின் அக்கா மகள் ஸ்ரேயாவின் கணவர் அஸ்வின் ராம் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தை இயக்கியுள்ளார். இந்த டீம் சமீபத்தில் பிக் பாஸ் 5 போட்டியாளர்களை சந்தித்தனர்.