ஜூலை 27 முதல் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவான், இன்னும் 6 நாட்களில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.மெதுவாக நகரும் கிரகமான சனியின் ஒவ்வொரு மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், எதிர்வரும் ஜூலை 27 அன்று அதிகாலை சனி வக்ர பெயர்ச்சி அடைந்து, டிசம்பர் 11 வரை 138 நாட்கள் அதே நிலையில் இருப்பார்.

இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் தொழில், வணிகம் மற்றும் நிதி விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிகளுக்கு இது மிகவும் சாதகமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் உழைப்பும் திறமையும் பாராட்டப்படும்.
முன்னர் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். திட்டமிட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும் காலமாக இது அமையும்.
சிம்மம்

சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
நிதி நிலை மேம்பட்டு, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வருமானம் அதிகரிக்கும். பழைய திட்டங்களை மீண்டும் தொடங்கினால் லாபம் கிடைக்கும்.
துலாம்

சனி வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை அளிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் புதிய வணிக ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும்.
சேமிப்பு அதிகரித்து, நிதிச் சிக்கல்கள் குறையும். குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.
கும்பம்

சனி வக்ர காலத்தில் கும்ப ராசிக்காரர்களின் உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயம், பழைய முதலீடுகளில் லாபம் மற்றும் முக்கிய முடிவுகளால் எதிர்கால முன்னேற்றம் கிடைக்கும்.
உடல்நலம் மேம்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குறிப்பாக பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்

சனி வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி, உடல்நலம், மன அமைதி மற்றும் நிதி முன்னேற்றம் கிடைக்கும்.
வியாபாரம் வளர்ச்சி அடையும். பணியிடத்தில் பாராட்டு கிடைப்பதுடன், வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் அமையும்.புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |