சனியின் வக்ர பெயர்ச்சி பலன்கள் - ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி நடக்கும் இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை...!
சனி ஜூன் 05 ஆம் திகதி அதாவது நேற்று கும்ப ராசியில் வக்ரமாடைந்தார்.
சனி வக்ரமடைந்ததால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
இந்த 5 ராசிக்காரர்களும் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.
கடகம்
சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சனியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனி பகவான் தொடர்பான பொருட்களை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி நடக்கிறது. சனி வக்ர பெயர்ச்சியால் சற்று மோசமான பலன்களே கிடைக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கோபமே அனைத்து வேலை மற்றும் விஷயங்களையும் கெடுத்துவிடும்.
சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. மகர ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இருப்பினும் தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரிடும். அதோடு எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது. ஆனால் சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் தொந்தரவைத் தரலாம்.
குறிப்பாக பண விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்த்திடுங்கள். சனியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனி பகவானுடன், அனுமனையும் வணங்குங்கள்.
மீனம்
ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. ஆனால் சனியின் வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது.
திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். சனியின் கெடுபலன்களைத் தவிர்க்க சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். இதனால் நற்பலன்கள் கிடைக்கலாம்.