சனி பெயர்ச்சி 2023 - லாப சனியால் கோடிகளை அள்ளப்போகும் ஒரே ஒரு ராசிக்காரர்! ஆபத்தும் காத்திருக்கு எச்சரிக்கை!
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது.
சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு.
சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இது பொதுவான பலன்தான்.
மேஷம்
லாப ஸ்தானத்தில் சனி பயணம் செய்வதால் கோடிகள் தேடி வரும்.
லாபத்தையும் உயர்வையும் தரப்போகிறது. மூத்த சகோதரர் உதவி கிடைக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். செய்யும்
முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல யோகம் வந்துள்ளது.
கோடீஸ்வர யோகம்
சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். சனி பகவான் நல்ல இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்ந்து கோடிகளை கொட்டித்தரப்போகிறார் அனுபவிக்கத் தயாராகுங்கள்.
அதே நேரத்தில் அதிக பணம் வருகிறதே என்று ஆணவத்தோடு இருக்கக் கூடாது அப்புறம் சனிபகவான் தனது தண்டனையை படிப்பினைகளை தர ஆரம்பித்து விடுவார்.
எச்சரிக்கை
சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாவது பார்வையின் மீது விழுகிறது.
வாகன பயணங்களில் கவனம் தேவை. பணம் நகைகளை இரவல் தர வேண்டாம். வாக்குறுதிகளை தர வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கி தராதீர்கள்.
பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சின்னச் சின்ன உடல் ஆரோக்கியங்கள் வந்து நீங்கும். வயிறு பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருப்பது அவசியம்.
