சனியின் உருவாக்கும் சுப யோகம் - அட இந்த ராசிகளுக்கு பொற்காலம்
ஜோதிடத்தில் சனிபகவானின் கிரக மாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இவர் நாம் செய்யும் கரும வினைக்கு ஏற்ப நன்மைகளை தரக்கூடியவர்.
இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார். இவர் பிற கிரகங்களுடன் இணைய நேரிடும். அப்போது சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
இந்த நிலையில் சதாஷ்டக யோகம் என்பது கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறாவது அல்லது எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது உருவாகிறது.
அக்டோபர் 5 ஆம் தேதி காலை 6:00 மணிக்கு சனியும் புதனும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் அமைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் அது யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசிக்காரர்கள் சனி புதன் இணைந்து உருவாக்கும் சதாஷ்டக இணைப்பால் சிறப்பு நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து, நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். எதிர்காலத்திற்காக செல்வத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். |
கடகம் | கடக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் சனி பகவானின் இணைவு பல துறைகளில் நன்மைகளைக் கொண்டு வரும். முன்பு இருந்து வந்த ஏராளமான தடைகள் மற்றும் பின்னடைவுகள் விலகி முன்னேற்றத்தை காண்பீர்கள். ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டு நின்ற பணிகள் அனைத்தும் தற்போது வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். |
மீனம் | மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சதாஷ்டக யோகம் மிகுந்த நன்மைகள் தரும். புதன் மற்றும் சனியின் சேர்க்கை வெற்றியையும், லாபத்தையும் ஈட்டித் தரும். ராசியின் லக்னத்தில் சனி இருப்பதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் வெற்றியை அடைய முடியும். நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். இத்தனை நாட்களாக நிலவி வந்த உடல்நலக் கோளாறுகள் படிப்படியாக குறையும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).