இந்தியாவில் ராவணனை கொண்டாடும் மக்கள்! இந்த 5 இடங்கள் பற்றி தெரியுமா?
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தசரா(விஜயதசமி), ஒன்பது நாள் நவராத்திரியின் உச்சக்கட்டத்தை குறிக்கிறது.
அதாவது துர்கா தேவி அசுரன் மகிஷாசுரனை வென்றதை குறிக்கிறது, இதன்போது கலாச்சார நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்நாளில் இந்தியாவின் சில இடங்களில் ராவணனை போற்றும் கோவில்களில் வழிபாடுகள் நடைபெறும்.
அந்த வகையில், ராவணனுக்கு பூஜைகள் நடக்கும் இடங்கள் பற்றி பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசத்தின் Kangra மாவட்டத்தில் ராவணனை வழிபடுகின்றனர், சிவபெருமான் மீது ராவணனுக்கு இருந்த பக்தி காரணமாக மக்கள் வணங்குகின்றனர். தசரா நாளில் மக்கள் நோன்பிருந்து கலாச்சார நிகழ்வுகளை மேற்கொண்டு வழிபடுகின்றனர்.
மத்தியப் பிரதேசம்
Mandsaur நகரின் ராவணனுக்கு நெருக்கமான நகரமாக அறியப்படுகிறது, காரணம் ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊராக நம்பப்படுகிறது, எனவே ராவணனை மருமகனாக கருதுகின்றனர். தசரா நாளில் ராவணனை கொண்டாடி மகிழ்கின்றனர்.
மகாராஷ்டிரா
Gadchiroli ஊரை சேர்ந்த பழங்குடியின மக்கள் ராவணனை கடவுளாக வணங்குகின்றனர், தசரா பண்டிகையின் போது பூஜைகள் செய்து போற்றுகின்றனர், ராவண தகனத்திற்கு பதிலாக உள்ளூர்வாசிகள் அவருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் இந்நாளை கொண்டாடுகிறார்கள்.
உத்தரபிரதேசம்
Bisrakh கிராமம் ராவணனின் பிறந்த ஊராக கருதப்படுகிறது, இதன் காரணமாக மக்கள் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பதில்லை, ராவணனுக்கு கோயில் ஒன்றும் இருக்கிறது, தசரா நாளின் போது ராவண தகனத்தை பார்ப்பதற்கு பதிலாக அவருக்கு பிரார்த்தனை செய்யவும் சடங்குகளை நடத்தவும் இங்கு கூடுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |